இரு தரப்பு மோதலாக மாறிய சிறுவர்கள் பிரச்சினை - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுபனையூரில் முன்விரோதம் காரணமாக எழுந்த மாணவர்கள் பிரச்சினை, இரு தரப்பினர் இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமியர் குடியிருப்பு பகுதியை கடந்து சென்ற ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த மாணவர் தாக்கப்பட்டுள்ளார்.

இதனால் கோபம் அடைந்த ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்தவர்கள் தக்கா பகுதியைச் சேர்ந்தவரின் வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள்.

மேலும், ஆதிதிராவிடர்கள்- இஸ்லாமியர்கள் கற்கள் வீசி மாறி மாறி தாக்கிக் கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது.

தகவல் அறிந்த திருக்கோவிலூர் காவல் துணை கண்காணிப்பாளர் பழனி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சிறுபனையூர் கிராமத்திற்கு விரைந்தனர்.

பிரச்சினைக்கு காரணமாக சொல்லப்படும் 30க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்தனர்.

அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்க சிறுபனையூர் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com