"தமிழ்நாட்டில் அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர்கள்" - உயர்நீதிமன்றம் வேதனை

தமிழ்நாட்டில் 180 சதவீதம் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுவது வேதனை அளிக்கிறது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துள்ளதாகவும், அதனை முற்றிலும் ஒழிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் 180 சதவீதம் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுவது வேதனை அளிக்கிறது என தெரிவித்தனர்.

மத்திய, மாநில அரசுகள் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இது குறித்து, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல செயலர், மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறைச் செயலர், தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் செயலர் ஆகியோர் பதில் மனு அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்

X

Thanthi TV
www.thanthitv.com