"திருமாவிடம் கலைஞர் கோரிக்கை வைப்பார்.. ஆனால் இதுவரைக்கும் நடக்கவில்லை" - முதல்வர் பேச்சு
"திருமாவிடம் கலைஞர் கோரிக்கை வைப்பார்.. ஆனால் இதுவரைக்கும் நடக்கவில்லை" - முதல்வர் பேச்சு
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின், 60 வது பிறந்த நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, விசிக எம்.பி ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின், திருமாவளவனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பதிலுக்கு, திருமாவளவன் முதலமைச்சருக்கு நினைவு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், சனாதனத்தை ஒன்றிணைந்து வீழ்த்துவோம் என்றும், இதுவே, தாம் அறிவிக்கும் கொள்கை பரிசு என்றும் தெரிவித்தார்.
Next Story