முதல்வர் மருமகன் சபரீசன் பெயரை பயன்படுத்தி மோசடி - பெண் ஊராட்சி தலைவியின் புகாரால் பரபரப்பு
முதல்வர் மருமகன் சபரீசன் பெயரை பயன்படுத்தி மோசடி - பெண் ஊராட்சி தலைவியின் புகாரால் பரபரப்பு
முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் பெயரை பயன்படுத்தி, தன்னிடம் 77 லட்சம் மோசடி செய்யப்பட்டுவிட்டதாக பெண் ஊராட்சி மன்ற தலைவர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்புத்தூரின் நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக உள்ள பாரதி என்பவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரில் அவர், மாசு காட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவிக்கு முதல்வர் மருமகன் சபரீசன் தான் ஆள் போடவுள்ளதாகவும், அப்பதவியை தனக்கு வாங்கி தருவதாகவும் கூறி, கடந்த மாதம் கைதான போலி ஐஏஎஸ் சசிகுமாரும், புவனேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி ஆகியோரும் தன்னிடம் 77 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றி விட்டதாக தெரிவித்துள்ளார்.
Next Story
