முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம்

x

முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு முதலமைச்சர் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 8 நாள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் செல்கிறார். முதல் இரண்டு நாட்கள் சிங்கப்பூரிலும், அடுத்த ஆறு நாட்கள் ஜப்பானிலும் முதல்வர் இருப்பார். சிங்கப்பூரில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையடுத்து,

ஜப்பான் செல்லும் முதலமைச்சர், அந்நாட்டு தொழில்துறை அமைச்சரை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ஒசாகா மற்றும் டோக்கியோ நகரங்களில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். கியோகுடோ மற்றும் ஓம்ரான் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்