ஜப்பான் சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்.. உற்சாக வரவேற்பு கொடுத்த ஜப்பானியர்கள்

x

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், சிங்கப்பூரில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதையடுத்து, சிங்கப்பூரில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் ஜப்பான் சென்றடைந்தார். ஜப்பான் நாட்டின் கான்சாய் விமான நிலையத்தில் தரையிறங்கிய முதலமைச்சர் ஸ்டாலினை, ஜப்பான் நாட்டின் இந்தியத் தூதர் நிகிலேஷ் கிரி மலர்கொத்து வழங்கி வரவேற்றார். ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். மேலும், ஜப்பான் நாட்டின் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்க உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்