மனம் மயங்கிச் சொக்கிக் கிடக்கும் ரசிகனாக...இளையராஜாவுக்கு நேரில் வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்

x

இளையராஜாவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்திலும் வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார். காலைப் பொழுது இனிதாய் மலர, இரவு இனிமையாய்ச் சாய தமிழ்நாட்டின் தேர்வு இசைஞானி இளையராஜா என குறிப்பிட்ட அவர், தமிழ்த்திரையுலகில் மட்டுமல்ல இசை உலகுக்கே அவர் ஒரு புரட்சி என புகழாரம் சூட்டினார். அதனால் தான் அவரை இசைஞானி என முன்னாள் முதல்வர் கருணாநிதி போற்றியதாகக் குறிப்பிட்ட முதல்வர், இசை கொண்டு இளையராஜா நிகழ்த்தும் மாய வித்தையில் மனம் மயங்கிச் சொக்கிக் கிடக்கும் ரசிகனாக அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாக குறிப்பிட்டு மகிழ்ந்தார். இதயங்களில் கோட்டை கட்டிக் கொடி நாட்டியிருக்கும் இளையராஜா எப்போதும் ராஜாதான் என கூறிய முதல்வர் ஸ்டாலின், வாழ்க நூறாண்டுகள் கடந்து என வாழ்த்தி மகிழ்ந்தார்.


Next Story

மேலும் செய்திகள்