என் பிரண்டை போல யாரு மச்சான்...சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரனை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

x

சிங்கப்பூரின் போக்குவரத்து மற்றும் வர்த்தக உறவுகளுக்கு பொறுப்பு அமைச்சரான எஸ்.ஈஸ்வரனை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். சென்னை மேயராக இருந்து, தமிழகத்தின் துணை முதல்வராக இருந்த சமயத்தில் சிங்கப்பூர் சென்றிருந்த போது ஏற்கனவே தாங்கள் சந்தித்துக் கொண்டதாகத் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், கடந்த ஆண்டு அவர் இந்தியா வந்த போது ​​தமிழ்நாடு மற்றும் சிங்கப்பூர் இடையேயான கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கான யோசனைகளைப் பரிமாறிக் கொண்டதாக நினைவு கூர்ந்தார். அத்துடன் சிங்கப்பூரில் இன்றைய விவாதங்கள் அர்த்தமுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களாக பலனளித்ததில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், 2024 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெறும் உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்புக்கு எஸ்.ஈஸ்வரனுக்கு அன்பான அழைப்பு விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் தான் விருந்தளிக்கக் காத்திருப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்