எவரெஸ்ட் நாயகிக்கு போனில் Wish... சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

x

தமிழ்நாடு வீராங்கனை முத்தமிழ்ச்செல்வியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் எவரெஸ்ட் சிகரத்தை அடையும் பயணத்தில் 7 ஆயிரத்து 200 மீட்டர் உயரத்தை கடந்து வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கும் அவரை முதல்வர் வெகுவாக பாராட்டினார். மேலும், மீதமுள்ள தூரத்தையும் வெற்றிகரமாக கடந்து, எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த தமிழ்நாட்டின் முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றிட வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட அவர், பயணத்தை வெற்றிகரமாக முடித்து தன்னை நேரில் சந்திக்க வருமாறும் அழைப்பு விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்