முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சி... பார்வையிட்ட முதல்வரின் மருமகன், பேரன், பேத்திகள்

x

முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியின் நிறைவு நாளான இன்று, முதலமைச்சரின் மருமகன் சபரீசன், தனது மகன் மற்றும் மகளுடன் வந்து பார்வையிட்டார். முதலமைச்சரின் குழந்தைப் பருவம் முதல் தற்போது வரையிலான பல்வேறு காலகட்டங்களின் புகைப்படங்கள், அரசியல் தலைவர்களுடனான புகைப்படங்கள், மிசா சிறைவாசத்தின் மீளுருவாக்கம் ஆகியவற்றை அவர்கள் பார்வையிட்டனர். அப்போது, முதல்வரின் பேரன், பேத்திகள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் சேகர்பாபு மற்றும் சபரீசன் ஆகியோர் பதிலளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்