"மோடிக்கே கிளாஸ் எடுத்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்" - எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

"மோடிக்கே கிளாஸ் எடுத்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்" - எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
x

பிரதமர் மோடிக்கு மேடையில் பாடம் எடுத்தவர் முதல்வர் ஸ்டாலின் என உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள, அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணியின் பயிற்சி பாசறை கூட்டத்தை அவர் தொடங்கி வைத்து பேசினார். 10 நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி சென்னை வந்திருந்த போது, அவரை மேடையில் வைத்துக்கொண்டே திராவிட மாடல் என்றால் என்ன என பாடம் எடுத்தவர் முதல்வர் ஸ்டாலின் என பெருமிதம் தெரிவித்தார். மேலும், மாநில சுயாட்சி குறித்தும், மாநிலத்திற்கு எது தேவை, எது தேவையில்லை என பேசியதும் முதல்வர் ஸ்டாலின் மட்டுமே என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்