கிண்டியில் கலைஞர் மருத்துவமனையை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

x

சென்னை கிண்டி கிங்ஸ் ஆய்வக வளாகத்தில், 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில்,1,000 படுக்கை வசதியுடன் பன்னோக்கு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை, ஜனாதிபதி திரவுபதி முர்முவை கொண்டு திறக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து, ஜூன் 15ம் தேதி மருத்துவமனையை திறக்க அரசு சார்பில் முயற்சி செய்யப்பட்டன. ஆனால், ஜனாதிபதி மாளிகையில் இருந்து தேதி ஒதுக்கப்படவில்லையென தகவல் வெளியானது. இந்நிலையில், கிண்டி கிங்ஸ் பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்