எச்சரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.. அமைதியாக இருந்த ஓபிஎஸ் - 3ம் நாள் பேரவை பரபரப்பு

x

எச்சரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.. அமைதியாக இருந்த ஓபிஎஸ் - 3ம் நாள் பேரவை பரபரப்பு

ஓபிஎஸ் இருக்கை விவகாரம், ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை தாக்கல் என சட்டப்பேரவை கூட்டத் தொடர் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்றது.

சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாள், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் அவை நிகழ்வில் பங்கேற்க, ஈபிஎஸ் தரப்பிரனர் பேரவை நிகழ்வுகளைப் புறக்கணித்தனர். இரண்டாவது நாள் கூட்டத்தில் ஈபிஎஸ் தரப்பினர், அவையின் மையப்பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் சபைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். அதன்பிறகு இந்தி எதிர்ப்பு தீர்மானம் முதல்வரால் முன்மொழியப்பட்டு, விவாதத்துக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையையும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தொடர்பாக நீதியரசர் அருணா ஜெகதீசன் அறிக்கையையும் பேரவையில் வைக்கப்பட்டது. இவ்விரு அறிக்கைகளும் பொது வெளியிலும் அரசியலிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்