கோழி இறைச்சி கடையில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி சோதனை - புழுக்களுடன் சிக்கிய 25 கிலோ கறி

x

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத் துறையினர் 25 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சியை பறிமுதல் செய்தனர்.


பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட கடைகளில் வாங்கிய கோழி இறைச்சியில் புழுக்கள் இருப்பதாகவும், கெட்டுப்போன இறைச்சி விற்கப்படுவதாகவும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்குப் புகார்கள் வந்தன.

இதையடுத்து, உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மருத்துவர் ராகவன் தலைமையிலான அதிகாரிகள், பெரியகுளத்தில் உள்ள இறைச்சிக் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, கடைகளின் குளிர்பதனப் பெட்டிகளில், சுகாதாரமற்ற முறையில் பல நாட்களாக வைத்திருந்த 25 கிலோ கோழி இறைச்சியை அவர்கள் பறிமுதல் செய்தனர்.

அதைத் தொடர்ந்து, பெரியகுளம் மார்க்கெட் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, காலாவதியாகி, தேதி குறிப்பிடாமல் இருந்த உணவு பண்டங்களை அவர்கள் கைப்பற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்