சத்தீஸ்கர் முதல்வரின் துணை செயலாளர் கைது

x

சத்தீஷ்கார் மாநில முதல்வர் பூபேஷ் பாகலின் துணை செயலாளர் சவும்யா சவுராசியா கைது செய்யப்பட்டுள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சி செய்யும் சத்தீஷ்காரில் நிலக்கரி சப்ளை செய்பவர்களிடம் இருந்து அதிகாரிகள், அரசியல்வாதிகள், இடைத்தரகர்கள் ஒரு டன்னுக்கு 25 ரூபாய் என கமிஷன் பெற்றுள்ளனர் என அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இவ்வாறு 16 மாதங்களில் 500 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் அமலாக்கப்பிரிவு குற்றம் சாட்டியுள்ளது. இந்த வழக்கில் மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி சமீர் விஸ்னோயை அக்டோபரில் கைது செய்தது.

இதனையடுத்து மத்திய முகமைகள் எல்லையை மீறுவதாகவும், அதிகாரிகள் மனிதநேயமற்ற முறையில் நடத்துவதாகவும் பூபேஷ் பாகல் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் இவ்வழக்கில் அம்மாநிலத்தில் செல்வாக்குமிக்க அதிகாரிகளில் ஒருவரான, பூகேஷ் பாகலின் துணை செயலாளர் சவும்யா சவுராசியா கைது செய்யப்பட்டுள்ளார். சவும்யா கைது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்