செஸ் ஒலிம்பியாட்டுக்காக வளைகாப்புக்கு "நோ".. சொன்ன "செஸ் ராணிக்கு" தேவதை பிறந்தாள்..!
செஸ் ஒலிம்பியாட்டுக்காக வளைகாப்புக்கு "நோ".. சொன்ன "செஸ் ராணிக்கு" தேவதை பிறந்தாள்..!
செஸ் ஒலிம்பியாட் தொடரில் நிறை மாத கர்ப்பிணியாக விளையாடிய ஹரிகா துரோண வள்ளிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த ஹரிகா துரோண வள்ளி நிறை மாத கர்ப்பிணியாக செஸ் ஒலிம்பியாடில் பங்கேற்றார். செஸ் ஆடியபோது நாற்காலியில் அமரவும் முடியாமல், நீண்ட நேரம் நிற்கவும் முடியாமல் அவர் சிரமப்பட்டார். சிரமத்தையும் பொருட்படுத்தாமல் சிறப்பாக ஆடிய அவர், இந்திய ஏ அணி வெண்கலப் பதக்கம் வெல்ல முக்கிய காரணமாகத் திகழ்ந்தார். இந்நிலையில், ஹரிகா துரோண வள்ளிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story