ரெண்டாக பிரிந்த சேரன் எக்பிரஸ்.. அலறிய பயணிகள் - சென்னைக்கு அருகே நள்ளிரவில் பயங்கரம்

திருவள்ளூர் ரயில் நிலையம் சென்ற சேரன் விரைவு ரயிலில், இரு பெட்டிகளின் இணைப்பு துண்டாகி, பலத்த சத்தம் கேட்டதால் பயணிகள் பீதியடைந்தனர்.
x

சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை நோக்கி சேரன் விரைவு ரயில் நேற்றிரவு புறப்பட்டது. திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இரவு 11 மணிக்கு ரயில் சென்ற போது, S7 மற்றும் S8 ஆகிய 2 பெட்டிகளிடையே பயங்கர சத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரயிலில் பயணித்த ரயில் பயணிகள் பயத்தில் அலறினர். உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. விரைந்து சென்ற ரயில்வே ஊழியர்கள் சோதனை செய்த போது, இரண்டு பெட்டிகளை இணைக்கும் கொக்கி உடைந்து கிடந்த‌து தெரிய வந்த‌து. இதையடுத்து, பெரம்பூரில் இருந்து புதிதாக இணைப்புக் கொக்கிகள் கொண்டு வரப்பட்டு, 3 மணி நேரத்திற்குப் பிறகு பெட்டிகளை இணைத்து ரயில் புறப்பட்டது. வழக்கமாக அதிவேகமாக செல்லும் விரைவு ரயில், நிலையத்தின் அருகே குறைந்த வேகத்தில் விரைவு சென்றதாலும், ஓட்டுநரின் சாமர்த்தியத்தாலும் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்