சேப்பாக்கம் மைதானத்தில் கருணாநிதி பெயரில் புதிய ஸ்டேன்ட்? - திறப்பு விழாவில் பங்கேற்கும் தோனி

x
  • சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் புதிய ஸ்டேன்ட்-ஐ (stand) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நவீன வசதிகளுடன் கூடிய இரண்டு பெவிலியன்கள் புதிதாக கட்டப்பட்டு உள்ளன.
  • இந்த இரு பெவிலியன்களையும் வருகிற 17ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
  • இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிஎஸ்கே கேப்டன் தோனி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
  • இந்நிலையில், மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்டேன்டிற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் வைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
  • சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள அண்ணா பெவிலியனை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்