பறக்கும் ரயில்களில் தீப்பொறி பறக்கும் "வாரிசு" போஸ்டர் - குஷியான விஜய் ரசிகர்கள்...

x

சென்னையில் பறக்கும் ரயில்களில் வாரிசு திரைப்பட போஸ்டர்கள் பிரம்மாண்டமாக ஒட்டப்பட்டுள்ளன... நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள வாரிசு திரைப்படத்தின் ப்ரமோஷன் வேலைகளை படக்குழு துவங்கி விட்டது. சென்னையில் உள்ள பிரபல திரையரங்கு வாசலில் ராட்சத பேனர் ஒன்றை முதலில் வைத்து பிள்ளையார் சுழி போட்ட படக்குழுவினர், தற்போது மெட்ரோ ரயில் முழுவதும் நடிகர் விஜயின் புகைப்படத்தை அச்சிட்டு ஒட்டியுள்ளனர்... பறக்கும் ரயிலில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் விஜயின் போஸ்டர்கள் குறித்த வீடியோவை அவரது ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்