தப்பித்த மாணவிகள்..செத்து மிதந்த தவளைகள்... சென்னை அரசு பள்ளியில் நடந்தது என்ன...?

x

தேங்கி நிற்கும் மழைநீரை வடியவைக்கும் பணியில் மாநகராட்சி களப்பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் இந்த இடம் அசோக் நகர் அரசு பெண்கள் பள்ளி வளாகம்.

புதன் கிழமை மழை காரணமாக சென்னையில் பள்ளி களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால், 4 ஆயிரத்து 500 மாணவிகள் படிக்கும் இந்த பள்ளியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. ஆம், பள்ளியில் தேங்கிய நீரில் மின் கசிவு ஏற்பட்டு தவளைகள் செத்திருப்பது தெரியவந்துள்ளது.

பள்ளியில் தேங்கிய நீரில் மிதித்த நாய்க்குட்டி தலைதெரிக்க ஓடியதை கண்ட ஊழியர்கள், மின் வாரியத்துக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். மின்வாரிய ஊழியர்கள், பள்ளியின் நுழைவாயில் முன்பகுதியில் மின் கசிவு இருந்ததை கண்டு சரிசெய்துள்ளனர்.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. பிரச்சினை உடனடியாக சரிசெய்யப்பட்டதாக தெரிவித்த தலைமை ஆசிரியை சரஸ்வதி, முன்னெச்சரிக்கையாக வியாழன் அன்றும் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதாக தெரிவிக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்