"திடீரென தமிழகத்தில் வெளுத்து வாங்கிய மழை" - அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய நடவடிக்கை | Rain

x

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது



கடலூர் மாவட்டத்தில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது.

விருத்தாசலம் சுற்றுவட்டார பகுதிகளான கொளப்பாக்கம் அரசக்குழி, சாத்தமங்கலம், ஊமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால், ஒரு சில இடங்களில் மின்வெட்டு நிலவியது. இதனால், பொதுமக்கள் அவதியடைந்தனர்..

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. மழை நீரோடு கழிவுநீரும் கலந்து சாலையில் சென்றதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்

இதே போல், புதுச்சேரி மாநிலத்திலும் கனமழை வெளுத்து வாங்கியது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் பணிமுடிந்து வீடு திரும்பியோர் கடும் அவதியடைந்தனர். இருப்பினும், இந்த மழையால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.....


Next Story

மேலும் செய்திகள்