சென்னை பல்கலை.செமஸ்டர் தேர்வு விவகாரம் - உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அதிரடி உத்தரவு

x

சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் கேள்வித்தாள் மாற்றி வழங்கப்பட்ட விவகாரம் குறித்து, விசாரணை நடத்த தொழில் நுட்ப கல்வி ஆணையர் தலைமையில், மூவர் அடங்கிய விசாரணை குழுவை நியமித்து, உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில், பொதுத்தமிழ் தேர்வு மூன்றாவது செமஸ்டர் நடைபெற இருந்த நிலையில், தேர்வுக்குரிய கேள்வித்தாளுக்கு பதிலாக, வேறு கேள்வித்தாள் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக தொழில்நுட்ப கல்வி இயக்குனர் லட்சுமி பிரியா தலைமையில் மூவர் அடங்கிய குழுவை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவினர் கேள்வித்தாள் மாறிய விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்