'சென்னை' முதலிடம் - தடம் பதித்த 'தமிழ்நாடு' | Chennai | Tamilnadu

x

பெண்களின் வேலைவாய்ப்பிற்கு உகந்த சூழல் கொண்ட நகரங்களின் பட்டியலில், இந்திய அளவில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. பெண்களின் வேலைவாய்ப்பிற்கான சிறந்த நகரங்கள் குறித்து, 111 நகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியலில், சென்னை முதலிடம் பிடித்துள்ளது. புனே, பெங்களூரு, ஹைதராபாத் நகரங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்த நிலையில், கோவை, மதுரை நகரங்களும் டாப் 10 தர வரிசையில் தடம் பதித்தன. அதேபோல, 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கான பட்டியலில், திருச்சி, வேலூர், ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய நகரங்கள் முதல் 5 இடங்களை பிடித்து அசத்தியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்