சென்னை டூ கோவை வந்தே பாரத் ரயில் - டிக்கெட் கட்டணம் எவ்வளவு?

x

சென்னை - கோவை வழிதடத்தில் இயங்கும் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி நாளை சென்னை சென்ட்ரலில் இருந்து தொடங்கி வைக்கிறார். இந்த நிலையில், அந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. ஆறு மணி நேர பயணம் என்பதால், உணவுக்கான கட்டணமும் டிக்கெட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில், குளிர்சாதன chair car டிக்கெட் கட்டணம் ஆயிரத்து 215 ரூபாயாகவும், குளிர்சாதன executive chair car டிக்கெட் கட்டணம் இரண்டாயிரத்து 310 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் உணவு வேண்டாம் என்பவர்களுக்கு முறையே ஆயிரத்து 57 ரூபாய் மற்றும் இரண்டாயிரத்து 116 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் கோவையில் காலை 6 மணியளவில் புறப்படும் வந்தே பாரத் ரயில், காலை 11.50 மணியளவில் சென்ட்ரல் வந்தடையும். மதியம் 2.25 மணியளவில் சென்னை சென்ட்ரலில் புறப்படும் ரயில், இரவு 8.15 மணியளவில் கோவை சென்றடைகிறது.


Next Story

மேலும் செய்திகள்