சென்னையில் நாளையும் பள்ளிகள் திறக்க முடியாத சூழல்

x

சென்னையில் பல அரசு பள்ளி வளாகங்களில் தேங்கிய மழைநீர் வடியாததால் நாளையும் பள்ளிகள் திறக்க முடியாத சூழல் நிலவுவதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கு பருவக்காற்றின் தீவிரம் காரணமாக, சென்னையின் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, வேளச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி, அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எழும்பூர் மாநில மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு பள்ளி வளாகங்களில் மழை நீர் அதிக அளவில் சூழ்ந்துள்ளது.

மழை விடாமல் தொடர்ந்து பெய்து வருவதால், தேங்கிய நீரை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது .

இதன் காரணமாக நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்