வாடகை பாக்கி தராததால் ஆத்திரம் “மாடியில் இருந்த செல்போன் டவரை காயலான் கடைக்கு போட்டு விட்டோம்" - அதிர்ச்சியில் உறைந்த போலீசார்

x
  • சென்னை கோயம்பேட்டை சேர்ந்த சந்திரன், கருணாகரன், பாலகிருஷ்ணன் என 3 பேருக்கு சொந்தமான இடத்தில் ஏர்செல் நிறுவனத்தின் சார்பில் மாத வாடகைக்கு ஒப்பந்த அடிப்படையில் செல்போன் டவர் வைத்ததாக தெரிகிறது.
  • இதனிடையே கடந்த சில வருடங்களாக ஏர்செல் நிறுவனம் மூடப்பட்ட நிலையில் அந்த நிறுவனத்தின் மேலாளர் அங்கு சென்று பார்த்த போது சம்பவ இடத்தில் வைக்கப்பட்டிருந்த செல்போன் டவர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
  • இது குறித்து கோயம்பேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
  • அப்போது போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில வருடங்களாக செல்போன் டவர் வைத்தவர்கள் வாடகை கொடுக்காமல் இருந்ததாகவும் செல்போன் டவர் துருப்பிடித்து விழும் நிலையில் இருந்ததால் அதனை காயலான் கடையில் போட்டு விட்டதாக இடத்தின் உரிமையாளர் தெரிவித்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
  • இந்த செல்போன் டவரின் மதிப்பு 8 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
  • மேலும் நிலுவையில் உள்ள வாடகை பாக்கி கொடுத்து விட்டால் செல்போன் டவரை கொடுத்து விடுவதாக இடத்தின் உரிமையாளர்கள் தெரிவித்ததால் இந்த வழக்கை எப்படி விசாரணை செய்வது என தெரியாமல் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்