மீண்டும் பலத்த மழை - மிதக்கும் சென்னையின் முக்கிய இடம் | Chennai Rain | Tn Rainfall

x

மீண்டும் பலத்த மழை - மிதக்கும் சென்னையின் முக்கிய இடம்

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இரட்டைகுழி தெரு, கண்பார்வையற்றோர் விடுதி மற்றும் பெண்கள் விடுதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் விடுதி அருகில் உள்ள தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த மழைநீரால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இரண்டு நாட்கள் பெய்த கனமழையால் தேங்கிய மழைநீர் வடிந்த நிலையில், மீண்டும் பெய்த மழையால் தேங்கிய நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்