சென்னையில் 12ஆம் வகுப்பு தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை என புகார -போராட்டத்தில் சக மாணவர்கள்

x

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளரை கண்டித்து பெற்றோர்கள் போராட்டம்.மாணவர்களும் தற்போது உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.திருநின்றவூரில் செயல்பட்டு வரும் ஏஞ்சல் பள்ளியில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பள்ளியின் தாளாளர் வினோத் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் திருநின்றவூர் காவல் துறையினர் புகார் ஏற்க்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் 100கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் தற்போது உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்