"பந்தயத்துக்கு நாங்களும் வரலாமா?" - விஜய், அஜித் ரசிகர்களையே சீண்டிய 'விஜய் சேதுபதி' ரசிகர்கள்

x

விஜய், அஜித் ரசிகர்களுக்கு இணையாக விஜய் சேதுபதி ரசிகர்களும் போஸ்டர் யுத்தத்தில் இறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் விஜயின் வாரிசு, அஜித்தின் துணிவு படத்திற்காக விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். இந்நிலையில், விஜய் சேதுபதி திரையுலக பயணத்தில் பன்னிரண்டாவது வருடத்தை தொடங்க உள்ள நிலையில் தாம்பரம் பகுதியில் அவரது ரசிகர் மன்றம் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் எங்கள் குடும்ப வாரிசு துணிவுடன் திரையுலக பயணத்தை தொடர வாழ்த்துக்கள் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்