இழப்பீடு வழக்குகளில் கமிஷன் பெற்றதாக புகார்.. சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் காவல் ஆய்வாளர் பணி நீக்கம்

x
  • சென்னையை அடுத்த பள்ளிகரணையில் முறைகேடு செய்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் காவல் ஆய்வாளரை பணி நீக்கம் செய்து தாம்பரம் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
  • பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவில், விபத்து குறித்து விசாரணைக்காக வரும் பொதுமக்களிடம் பணம் அதிகமாக வசூலிப்பதாக தாம்பரம் காவல் ஆணையரிடம் கடந்த ஆகஸ்டு மாதம் புகார்கள் வந்தன.
  • இந்த புகார் மீது பள்ளிக்கரணை உதவி ஆணையர் ஜேம்ஸ் தங்கையா விசாரணை நடத்தி, அரசு வழங்கிய வாகனத்துக்கு பெண் காவல் ஆய்வாளர் ராணி தனது சொந்த செலவில் ஓட்டுநரை நியமித்துக் கொண்டு, இழப்பீடு விவகாரங்களில் கமிஷன் பெற்றதாக கூறப்பட்ட புகார்கள் உண்மை என அறிக்கை அளித்தார்.
  • இதையடுத்து, ராணியை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டிருந்தார்.
  • கடந்த 7 மாதங்களாக நடத்தப்பட்ட விசாரணையில் காவல் ஆணையர் ராணி முறைகேடுகளில் ஈடுப்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரை பணி நீக்கம் செய்து காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்