சென்னையில் குற்றவாளியுடன் தொடர்பில் இருந்த பெண் போலீஸ்.. சொத்தை எழுதிவைத்த குற்றவாளி

x

மோசடி வழக்கு குற்றவாளியுடன் தொடர்பில் இருந்து சொத்து சேர்த்ததாக, துறைமுகம் காவல் நிலைய பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பி.எம் ரெட்டி என்கிற முத்துவேல், மதுரையைச் சேர்ந்த தனியார் கல்லூரி நிர்வாகி முகமது ஜலீல் என்பவரிடம், கல்லூரி விரிவாக்கப் பணிகளுக்கு 200 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, ஐந்தரை கோடி ரூபாயை கமிஷனாகப் பெற்று ஏமாற்றியுள்ளார்.

இதுபோன்ற மோசடி வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ள முத்துவேல் மீது குண்டர் சட்டத்தின் கீழ் காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், மோசடி பணத்தில் முத்துவேல் வாங்கி குவித்த சொத்துக்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, துறைமுகம் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் அஜ்மோல் என்பவரின் பெயரில் ஒரு சொத்து இருந்தது தெரியவந்தது. முத்துவேல் வழக்கு விசாரணைக்கு ஆஜரானபோது, அவருக்கும் விவகாரத்தான அஜ்மோலுக்கும் தொடர்பு ஏற்பட்டு, இருவரும் வில்லிவாக்கத்தில் ஒன்றாக வசித்து வந்ததும், அஜ்மோலின் பெயருக்கு ஒரு வீட்டை முத்துவேல் எழுதிக் கொடுத்தததும் தெரியவந்தது. இதையடுத்து, அஜ்மோலை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்தகட்டமாக, அஜ்மோலுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த காவல் துறை திட்டமிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்