சென்னை முழுக்க அரசு வாகனத்தில் உலா வந்த போலி ஆபீசர் - போலீஸ் விசாரணையில் அம்பலமான உண்மை

x
  • சென்னை அண்ணாசாலையில் கடந்த 15ம் தேதி போக்குவரத்து போலீசார் வாகனங்களை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
  • அப்போது, நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டு இருந்த காரில், மத்திய அரசு வாகனம் போல,National Crime information officer chennai district Govt of India என, பலகை வைக்கப்பட்டிருந்தது.
  • இதனையடுத்து, சம்பந்தப்பட்ட காரின் உரிமையாளரான கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜான்பீட்டர் என்பவரை போக்குவரத்து போலீசார் செல்போனில் தொடர்பு கொண்டனர்.
  • அவரை வரவழைத்து காருக்கான ஆவணங்களை எடுத்து வருமாறு கூறியுள்ளனர்.
  • விசாரணையில், அரசு வாகனத்தை போல போலியான பலகையை வைத்து வலம் வந்தது தெரியவந்தது.
  • அவர் மீது, அரசு முத்திரையை போலியாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்