சென்னையில் PFI அலுவலகம் பற்றி திடீர் விசாரணை - போலீசார் குவிப்பால் பரபரப்பு

x

சென்னையில் PFI அலுவலகம் பற்றி திடீர் விசாரணை - போலீசார் குவிப்பால் பரபரப்பு


சென்னை மேற்கு தாம்பரத்தில், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் செயல்பட்டு வந்த வீட்டை போலீசார் ஆய்வு செய்தனர்.

வ ஊ சி தெருவில் இயங்கி வந்த அலுவலகத்துக்கு சீல் வைக்க தாம்பரம் தாசில்தார் கவிதா தலைமையில் காவல் உதவி ஆணையர் சீனிவாசன், காவல் ஆய்வாளர் சார்லஸ் உள்ளிட்ட போலீசார் சென்றனர். விசாரணையில், ஏற்கனவே அலுவலகம் நடத்தியவர்கள் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு காலி செய்து விட்டு சென்றது தெரியவந்தது. அந்த வீட்டில் வேறு குடும்பத்தினர் வாடகைக்கு இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் அந்த வீட்டில் வாடகைக்கு வரும் பொழுது போடப்பட்ட ஒப்பந்த பத்திரம் மற்றும் வீட்டை காலி செய்யும் பொழுது எழுதி கொடுத்த ஒப்பந்த பத்திரங்களை ஆய்வு செய்து அதன் பிறகு அங்கிருந்து கிளம்பி சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்