சந்திரயான்-3 சீறிப்பாய்ந்ததை விமானத்தில் இருந்தபடி வீடியோ எடுத்த சென்னை பயணி - செம வைரலாகும் அரிய வீடியோ

x

சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் சீ​றிப்பாய்ந்தது விமானத்தில் இருந்தபடி பயணி ஒருவர் படம் பிடித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் வெள்ளிக்கிழமை விண்ணில் பாய்ந்தது. இந்த காட்சிகளை சென்னையிலிருந்து டாக்கா சென்ற இன்டிகோ விமானத்தில் இருந்த பயணி ஒருவர் படம் பிடித்துள்ளார். தெள்ளத் தெளிவாக பதிவாகியுள்ள அந்தக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்