வேலையை விட்டு விட்டு... ஆன்லைன் டிரேடிங்கில் இறங்கிய வாலிபர் - நஷ்டத்தால் நேர்ந்த பரிதாபம்

• சென்னையை அடுத்த கீழ்கட்டளையில் ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டமடைந்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். • குமரன் நகரை சேர்ந்த 32 வயதான பரணிதரன், வேலையை விட்டு விட்டு முழுமையாக ஆன்லைன் டிரேடிங்கில் இறங்கி உள்ளார். • இதில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய தனது மனைவியின் நகைகளை விற்றுள்ளார். • இதனால் கணவன்- மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டது. • இதில் கோபம் கொண்ட மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். • மனஉளைச்சல் அடைந்த பரணிதரன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். • தகவல் அறிந்த மடிப்பாக்கம் போலீசார், பரணிதரன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com