6ஆவது மாடியிலிருந்து குதித்து ஒருவர் தற்கொலை - தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம்-போலீசார் தீவிர விசாரணை

x

6ஆவது மாடியிலிருந்து குதித்து ஒருவர் தற்கொலை - தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம்-போலீசார் தீவிர விசாரணை

சென்னை பெரம்பூர் பிரகாசம் தெருவை சேர்ந்தவர் சைமன் சின்னிசந்திரன். இவர் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்த நிலையில் திடீரென விடுதியின் 6 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சைமனிடம் இருந்து கிடைத்த கடிதத்தை கைப்பற்றினர். கடிதத்தில், தான் 18 லட்சம் பணத்தை இழந்து விட்டதாகவும், இதுவரை எனக்கு பண உதவி செய்த அனைவருக்கும் நன்றி என்றும், தனது இறப்பு குறித்து வழக்கறிஞர் கௌதமனுக்கு தகவல் தெரிவிக்குமாறு குறிப்பிட்டிருந்தார். பின்னர் போலீசார் வழக்கறிஞர் கெளதமனை வரவழைத்து விசாரிக்கையில், சைமன் கடந்த 2020 ம் ஆண்டு வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்