"சாப்பாடு டேஸ்ட் ஆ இருக்கா? இல்ல வேற மாத்தலாமா" - மாணவர்களிடன் குறைகளை கேட்டறிந்த மேயர்

x

சென்னை, ராயபுரம் தொகுதிக்கு உட்பட பல்வேறு இடங்களில், மாநகர மேயர் பிரியா ஆய்வு மேற்கொண்டார். சூரிய நாராயணா தெருவில் அமைந்துள்ள பள்ளியின் சமையல் கூடத்தை பார்வையிட்டு, மேயர் பிரியா ஊழியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து, பனைமரத் தொட்டி பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்ட அவர், பணியாளர்கள், துறை அதிகாரிகள் சரியான நேரத்திற்கு பணிக்கு வந்துள்ளனரா? என்பது குறித்து சரிபார்த்தார். இதனைத் தொடர்ந்து அர்த்தன் சாலையில் உள்ள, உருது தொடக்கப் பள்ளியில், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகளை ஆய்வு செய்து, அவற்றை குழந்தைகளுக்கு பரிமாறினார். இதற்கிடையே, சென்னை 2.0 திட்டத்தில் சுமார் 2 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் அண்ணா பூங்கா மறு சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். அங்கு, 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் நினைவஞ்சலி பேனருக்கு மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். பூங்காவில் ஆய்வு செய்த அவர், பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது முதியவர் ஒருவர் தாங்கள் அழகாக இருப்பதாக கூறிய நிலையில், அவர் சிரித்துக் கொண்டே சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்