பைக் மீது பயங்கரமாக மோதிய லாரி... கணவன் கண் முன்னே துடி துடித்து பலியான மனைவி - சென்னையில் பயங்கரம்

x

தாம்பரம் அடுத்த வெங்கம்பாக்கத்தை சேர்ந்த அலெக்ஸாண்டர் என்பவர், தனது மனைவி தெரசாவுடன், இருசக்கர வாகனத்தில் மப்பேடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வேகமாக ஜல்லிக் கற்களை ஏற்றி வந்த லாரியின் பக்கவாட்டில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில், லாரியின் பின் சக்கரம், தெரசாவின் காலின் மீது ஏறி இறங்கியது. அலெக்ஸாண்டர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். வலியால் துடித்த தெரசாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்