நாள் ஒன்றுக்கு 2000 பஸ், 2 லட்சம் பயணிகள் - ஆசியாவின் பிரமாண்டம்! இந்தியாவின் பெருமை!

x

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு அருகே, 1.5 ஏக்கர் பரப்பளவில் பிராட்வே பேருந்து நிலையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.

சென்னை நகர் 1990 முதல் பெரும் வளர்ச்சி பெறத் தொடங்கியது. அதிகரிக்கும் போக்குவரத்துத் தேவைகளுக்கு பிராட்வே பேருந்து நிலையத்தில் இடம் போததால், ஓரு புதிய பேருந்து நிலையத்தை சென்னையின் புறநகர் பகுதியான கோயம்பேட்டில் உருவாக்க திட்டமிடப்பட்டது.

கோயம்பேட்டில் 295 ஏக்கர் பரப்பளவில், காய்கறிகள் மொத்தவிலை சந்தை வளாகம்1996ல் திறக்கப்பட்டது. அதற்கு அருகே புதிய பேருந்து நிலையத்திற்காக 38 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கியது.

கோயம்பேடு புதிய பேருந்து நிலையத்திற்கு 1999 ஜூன் 6ல் அன்றைய முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தினால் திட்டமிட்டு, வடிவமைக்கப் பட்ட இந்த வளாகம், 103 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப் பட்டது.

2001ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, கோயம்பேடு பேருந்து நிலையத்தை 2002ல் அன்றைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா திறந்து வைத்தார்

160 நடைமேடைகள் கொண்ட கோயம்பேடு பேருந்து நிலையம், மிக நவீன பாணியில், அனைத்து வசதிகளும் கொண்ட பிரம்மாண்ட மான பேருந்து நிலையமாக உருவாக்கப்பட்டது. இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப் பெரிய பேருந்து நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

தினமும் சுமார் 2000 பேருந்துகளும், 2 லட்சம் பயணிகளும் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு மிக அருகே சென்னை மெட்ரோ ரயில் நிலையமும், ஆம்னி பேருந்து நிலையமும் கட்டப்பட்டுள்ளன.

2018 அக்டோபரில், எடப்பாடி பழனிசாமி அரசு, இதற்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் என்று பெயர் மாற்றம் செய்தது.

ஆசியாவின் மிகப் பெரிய பேருந்து நிலையமான சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் திறக்கப்பட்ட தினம், 2002 நவம்பர் 18.


Next Story

மேலும் செய்திகள்