கந்த சஷ்டி பாடிய இஸ்லாமிய மாணவி...மலர் பூஜையில் நெகிழ்ச்சி சம்பவம் - மெய்சிலிர்க்க வைத்த பாடல்

x

சென்னை புளியந்தோப்பில் மத நல்லிணக்கத்தின் வெளிப்பாடாக இஸ்லாமிய மாணவி கந்த சஷ்டி கவசம் பாடியது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.புளியந்தோப்பில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் ஐயப்பன் சாமிக்கு மலர் பூஜை நடத்தப்பட்டது. சபரிமலைபோல் 18 படிகளுடன் அமைக்கப்பட்ட அரங்கத்தில் ஐயப்பன் சாமி வைக்கப்பட்டிருந்த நிலையில், மலர் பூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பஜனை பாடி ஐயப்பனை வழிபட்டனர். அப்பகுதியைச் சேர்ந்த 108 பெண்கள் விளக்கு ஏற்றி சிறப்பு பூஜை செய்து ஐயப்பனை வணங்கினார்கள். மலர் பூஜையின் சிறப்பு அம்சமாக இஸ்லாமிய மாணவி ஹினா கந்த சஷ்டி கவசம் பாடலை பாடி, மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினார். இதனை கேட்டு ரசித்த பக்தர்கள் சிறுமியைப் பாராட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்