சென்னை நீதிபதி கொல்கத்தா மாற்றம் - குடியரசுத் தலைவர் அதிரடி உத்தரவு!

x

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேலுமணியை கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். நீதிபதி வேலுமணியை கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்திருந்தது.

ஆனால், கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு பதிலாக, வடகிழக்கு மாநில உயர் நீதிமன்றத்திற்கு மாற்றும்படி, நீதிபதி வேலுமணி கோரிக்கை வைத்திருந்தார். இந்த கோரிக்கையை உச்ச நீதிமன்ற கொலிஜியம் நிராகரித்திருந்த நிலையில், தற்போது கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக குறைகிறது.


Next Story

மேலும் செய்திகள்