வறுமையில் தாய்.. உதவ நினைத்த மகள்... 'இன்ஸ்டாவால் பறிபோன மாணவியின்..'- பின் நேர்ந்த துயரம்... சென்னையில் அதிர்ச்சி

x
  • இன்ஸ்டாகிராமில் ஆன்லைன் வணிகம் செய்ய விரும்பி பணத்தை பறிகொடுத்த கல்லூரி மாணவி, தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • சென்னை, 7 கிணறு பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த நிலையில், தனது தாய் பொருளாதார ரீதியாக சிரமப்படுவதை கண்டு வருத்துமடைந்துள்ளார்.
  • இதனால், ஆன்லைனில் வணிகம் செய்ய விரும்பிய மகாலட்சுமி, இன்ஸ்டாகிராமில் அது குறித்து பல லிங்க்குகளில் தேடி வந்ததாக தெரிகிறது.
  • இதில், முப்பதாயிரம் ரூபாய் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று இன்ஸ்டாவில் வந்த லிங்க்கை க்ளிக் செய்த மாணவி, அதில் தனது தாயின் வங்கி கணக்கில் இருந்து முப்பதாயிரம் ரூபாய் அனுப்பியதாக கூறப்படுகிறது.
  • இதன்பின்னர் எந்த ஒரு தகவலும் திருப்பி வராத நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவி மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இந்த சம்பவத்தில் மாணவியின் செல்போனை கைப்பற்றியுள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்