மனைவி மற்றும் மகளின் கழுத்தை...இதற்காகவா...நெஞ்சை உலுக்கும் சம்பவம்... | CHENNAI
சென்னையில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் மகளை அரிவாளால் வெட்டிய கணவர் மெட்ரோ பாலத்தின் ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் அகிலன். இவரின் மனைவி திலகவதி. இவர்களுக்கு 7 வயதில் மகள் ஒன்று உள்ள நிலையில், மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகராறில் மனைவி மற்றும் மகளின் கழுத்தை அரிவாளால் வெட்டி விட்டு அகிலன் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின்னர், அசோக் நகரில் உள்ள மெட்ரோ பாலத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற அகிலனை மீட்ட போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
