ரூ.2000 கோடி வசூலித்த சென்னை மாநகராட்சி...தேனாம்பேட்டையில் ரூ.411 கோடி வெளியான முழு ரிப்போர்ட்

x

சென்னை மாநகராட்சியின் மொத்த வரி வசூல், 2022-23இல், இதுவரை இல்லாத அளவுக்கு, 2 ஆயிரத்து 44 கோடியாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

2022-23இல் சென்னை மாநாகராட்சி, சொத்து வரியாக ஆயிரத்து 500 கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், ஆயிரத்து 522 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.

2022-23இல் தொழில் வரி வசூலுக்கு 500 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், 521 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் ஒன்பதாம் மண்டலமான தேனம்பேட்டையில் அதிகபட்சமாக 305 கோடி ரூபாய் சொத்து வரியாகவும், 106 கோடி ரூபாய் தொழில் வரியாகவும் வசூலாகியுள்ளது.

2021-22இல் மொத்த வரி வசூல் ஆயிரத்து 240 கோடி ரூபாயாகவும், 2020-21இல் ௯௫௯ கோடி ரூபாயாகவும் இருந்தது ஒப்பிடத்தக்கது.

சொத்து வரி செலுத்தாத சுமார் 100 பேரிடம் இருந்து வசூல் செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சியின் வருவாய் அலுவலர் சிட்டி பாபு கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்