ஸ்பீட் லிமிட்டை தாண்டும் வண்டிகளுக்கு அபராதம் விதிக்க புதிய முறை - சென்னை கமிஷனர் எச்சரிக்கை

x
  • சாலைகளில் வேக வரம்பை தாண்டி இயக்கும் வாகனங்களை புகைப்படம் எடுத்து அபராதம் விதிக்கும் வசதி அறிமுகப்படுத்த உள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
  • சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் அருகே, டிராபிக் சிக்னல்கள், பல்நோக்கு செய்தி பலகைகள் என, புதிதாக நிறுவப்பட்டுள்ள தொழிற்நுட்ப முயற்சிகளை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார்.
  • இதனை தொடர்ந்து மேடையில் பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், வேக கட்டுப்பாடு குறித்த திரை தற்பொழுது 6 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது என்றார்.
  • முன்னதாக போக்குவரத்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு மோர் வழங்கும் திட்டத்தை அவர் துவக்கி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்