வீட்டுக்குள் நுழைந்து மூதாட்டி முகத்தில் குழம்பை ஊற்றி துணிகர கொள்ளை... விசாரணையில் வெளியான ஷாக் தகவல்...

x

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் வசித்து வருபவர் இளஞ்சி. இவரின் வீட்டிற்கு வந்த ஆறுமுகம் என்பவர் மூதாட்டியின் மீது குழம்பை ஊற்றி, கழுத்தில் இருந்த நகைகளை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசாருக்கு, ஆறுமுகம் என்பவர் நகைகள் செய்து கொடுக்கும் தொழில் செய்து வருவது தெரியவந்துள்ளது. இந்நிலையில், ஆறுமுகம் தான் மூதாட்டிக்கும் நகைகள் செய்து கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில், ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஐந்தரை சவரன் நகைகளை பறிமுதல் செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்