கேபிள் டவர் விழுந்து இருவர் பலி - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

கேபிள் டவர் விழுந்து இருவர் பலி - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
Published on

சென்னை அரும்பாக்கத்தில் கேபிள் மற்றும் இன்டர்நெட் டவர் விழுந்து 2 ஊழியர்கள் பலியான சம்பவத்தில், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த மாதம் 16-ஆம் தேதி, நேரிட்ட விபத்தில் நிறுவனத்தின் ஊழியர்களான சோழவரம் மஞ்சுநாதனும், செம்மஞ்சேரி தனசேகரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், அந்த தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் சக்கரபாணி, மேலாளர் சிவபுதின் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

பின்னர், இருவரையும் காவல் நிலைய ஜாமீனில் போலீசார் விடுவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com