நேக்கா 4 பைக்கை தூக்கிய 'கில்லாடி லேடி'... விசாரணையில் சொன்ன ஒரு குட்டி ஸ்டோரி - அதிர்ந்து போன போலீசார்

x

வண்ணாரப்பேட்டைக்கு உட்பட்ட பகுதிகளில், இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து காணாமல் போவதாக, புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், இளம் பெண் இருசக்கர வாகனங்களை, அதிகாலை வேளையில் திருடிச் செல்வதை கண்டறிந்தனர். இதனிடையே, தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், அந்த பெண்ணை கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர். அதில், இருசக்கர வாகனங்களை ஓட்டும் ஆசையிலேயே திருடியதாகவும், பெட்ரோல் தீர்ந்தவுடன் அவற்றை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிடுவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், அந்த பெண் கூறிய இடங்களில் இருந்த நான்கு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், அந்த பெண்ணை மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்