விபத்தை ஏற்படுத்திவிட்டு கண்ணில் பெப்பர் ஸ்பிரே அடித்து ரூ.50 லட்சம் கொள்ளை... விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்கள் - சென்னையில் பயங்கரம்

x

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர் ஜாகீர் உசேன். இவர் சென்னை, எழும்பூரில் உள்ள எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வரும் நிலையில், திருவல்லிகேணி பகுதியிலிருந்து 50 லட்ச ரூபாய் பணத்துடன் மண்ணடிக்கு சென்று கொண்டிருந்துள்ளார். உடன் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியரான காஜாமொய்தீன் என்பவரும் பயணித்த நிலையில், இவர்களின் வாகனம் மீது இருவர் மோதியுள்ளனர். இதில், இருவரின் கண்ணிலும் ஸ்பிரே அடித்து 50 லட்ச ரூபாய் பணத்தை கும்பல் திருடியுள்ளது. இது குறித்து, ஜாகீர் உசேன் போலீசில் புகாரளித்த நிலையில், உசேனுடன் பயணித்த காஜாமொய்தீன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. விசாரணையில், காஜாமொய்தீனே ஆட்களை ஏவி விபத்தை ஏற்படுத்தியது தெரியவர, காஜாமொய்தீன் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். மூவரிடமும், கொள்ளையடிக்கப்பட்ட பணம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசரிடம், பணத்துக்கான ஆவணங்கள் சமர்பிக்கப்படாத நிலையில், ஹவாலா பணமா என போலீசார் சந்தேகிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்