சென்னையில் நடந்த வங்கி கொள்ளை.. யாரிடம், எவ்வளவு தங்கம் மீட்பு? அதிரடியாக வெளியிட்ட போலீஸ்

அரும்பாக்கம் வங்கி கொள்ளையில், மீட்கப்பட்ட தங்கத்தின் அளவு குறித்து சென்னை காவல்துறை சார்பில், அதிகாரப்பூர்வமான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
x

அரும்பாக்கம் வங்கி கொள்ளையில், மீட்கப்பட்ட தங்கத்தின் அளவு குறித்து சென்னை காவல்துறை சார்பில், அதிகாரப்பூர்வமான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை அரும்பாக்கம் வங்கியில் மொத்தம் 31.7 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், போலீசார் மொத்த தங்கத்தையும் மீட்டனர்.

மீட்கப்பட்ட தங்கத்தில், யாரிடம் இருந்து, எவ்வளவு தங்கம் மீட்கப்பட்டது என்பது குறித்து போலீசார் அதிகாரப்பூர்வமாக பட்டியல் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில், சந்தோஷிடம் இருந்து 15.951 கிலோ தங்கம் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளி சூரிய பிரகாஷிடம் இருந்து 8.827 கிலோ தங்கம் மீட்கப்பட்ட நிலையில்,

காவல் ஆய்வாளர் அமல்ராஜ் 3.590 கிலோ தங்கத்தை போலீசிடம் ஒப்படைத்ததாகவும்

அமல்ராஜ் மற்றும் சந்தோஷின் உறவினர் வீட்டில் இருந்து 2.656 கிலோ தங்கம் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளி பாலாஜியிடம் இருந்து 163 கிராம் மற்றும் செந்திலிடம் இருந்து 80 கிராம்

முருகனிடம் இருந்து 373 கிராம், ஸ்ரீவத்ஸ்வாவிடம் இருந்து 63 கிராம் தங்கத்தை மீட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்